Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச

பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச

1 year ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து யோஷித்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாவது,

அன்றைய தினம் சனிக்கிழமை நான் வீட்டிலிருக்கவில்லை.எனது குடும்பத்தினரும் வீட்டில் இருக்கவில்லை. இதனால் எனது வீடு பூட்டியிருந்தது.

நான் பெலியத்த இடமாறும் பகுதிக்கு அருகில் சென்றவேளை போக்குவரத்து பொலிஸை சேர்ந்த ஒருவர் எனது வாகனத்தை மறித்தார். முதலில் அவர் எனது வாகன பதிவுகுறித்த ஆவணங்களை சோதனையிட்டார்.காப்புறுதி வாகனசாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றையும் அவர் சோதனையிட்டார்.

என்னை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிஐடியினர் அந்த பகுதிக்கு வரும்வரை என்னை அங்கேயே இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் என்னை விசாரிக்கவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அங்கிருந்த அலுவலகத்தின் ஆசனத்தின் அமர்ந்திருக்குமாறு என்னை அவர் கேட்டுக்கொண்டார்

நான் பெலியத்தையில் உள்ள வீட்டிற்கு சென்று அங்கு காத்திருக்கின்றேன் என அவரிடம் தெரிவித்தேன்.

ஆனால் அவர் பணிவான முறையில் அதனை ஏற்கமறுத்துவிட்டார்.

நான் எனது ஆதரவாளரின் திருமணவீட்டிற்கு சென்றுகொண்டிருந்தேன், நான் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னால் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்தேன்.

என்னை தடுத்துநிறுத்துவார்கள் என்பது எனக்கு தெரியாத போதிலும், எனது வீட்டிலிருந்து நான் அதிவேக வீதியை நோக்கி பயணித்த ஆரம்பித்த தருணத்திலிருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் என்னை பின்தொடர்கின்றார்கள் என்பது எனக்கு தெரிந்திருந்தது.

சிஐடியினர் அங்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் என்னை தங்களது வாகனத்திற்கு வருமாறு அவர்கள் உத்தரவிட்டனர், அதன் பின்னர் கொழும்பிலுள்ள சிஐடியி தலைமையகத்திற்கு புறப்பட்டோம் -இந்த பயணம் மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.

ஐந்தரை மணியளவில் அவர்கள் என்னிடம் சிறு வாக்குமூலமொன்றை பதிவு செய்துவிட்டு கொழும்பு மேலதிக நீதவானின் இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.என்னை தடுத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதவான் நீதிமன்றத்தில் காத்திருந்தவேளை தனது பாவனைக்காக சகோதரர் இரண்டு போத்தல்களில் நீரை வழங்கினார் என தனது குடும்ப உறுப்பினருக்கு தெரிவித்துள்ள யோஷித்த ராஜபக்ச அவர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு எனக்கு அனுமதி வழங்கவில்லை, மேலும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உண்பதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தான் சிறைச்சாலையில் சமைக்கப்பட்ட தேங்காய் சம்பலையும் சோற்றையும் உண்ணவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ள யோஷித்த  என்னை சிறைக்கூண்டில் அடைத்துவைத்திருந்தார்கள். 45 நிமிடங்கள் மாத்திரம் வெளியே வர அனுமதித்தார்கள்  பகலில் ஒரு தடவையும் மாலை  ஒரு தடவையும் என யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாயை தந்து உறங்கச்சொன்னார்கள் அன்றிரவு நான் உறங்கவேயில்லை என தெரிவித்துள்ள  யோஷித்த  ராஜபக்ச எனது நெருங்கிய நண்பர்களினது நடமாட்டத்தையும் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓரு மனிதன் குற்றவாளி என உறுதிப்படுதப்படும் வரை அவனை  நிராபராதி என்ற கருதவேண்டும் என்பது  இயற்கை நீதியின் கொள்கை எனவே அவர் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தப்பட்டுள்ளார், அவர் நடத்தப்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமானது ”  எனதன்னை அடையாளம் காட்ட விரும்பாத அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைச்சாலைக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

ரக்பி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான யோஷித ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.’ எனக்கு எதிரான வழக்கு எட்டு வருடகாலத்திற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது,அவ்வேளை என்னை விசாரணை செய்தார்கள் ஆனால் குற்றவாளி என அடையாளப்படுத்தவில்லை ஒருவரை மாத்திரம் குற்றவாளி  என குறிப்பிட்டார்கள்.”

எனது தாய்வழி பாட்டியான டெய்சி பெரொஸ்ட்டை மாத்திரம் குற்றவாளிஎன குறிப்பிட்டிருந்தார்கள்,ஆனால் இம்முறை என்னை குற்றவாளி என குறிப்பிட்டுள்ளார்கள்,என்னை தேடி கண்டுபிடிப்பதற்கு  ஏன் பல வாகனங்களையும் மோட்டார் சைக்கிளையும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை.”

‘ என்னை சிஐடி அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்தால் நான் அங்கு சென்று வாக்குமூலம் வழங்கியிருப்பேன்,கதிர்காமத்தில் கட்டப்படும் வீடு தொடர்பில் சிஐடியில் ஆஜராகுமாறு ஜனவரி மூன்றாம் திகதியே உத்தரவிட்டிருந்தார்கள்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே
செய்திகள்

மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

June 18, 2026
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!
செய்திகள்

அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!

June 18, 2026
களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
செய்திகள்

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

June 18, 2026
Next Post
நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு

நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.