Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் விருத்தியடைந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதுடன், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்துக்கு அப்பாலுள்ள ஆழ்கடல் பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த அவசர எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியானது இன்று (1) முற்பகல் 11.30 அளவில் வடக்கு அகலாங்கு 12.1° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.3° ஆகிய எல்லைகளுக்கு அருகில் மையங்கொண்டிருந்தது.

‘முரசு’ சூறாவளியானது மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (2) காலையாகும்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய-மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர சூறாவளியாக மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நாளை நள்ளிரவுக்கும் நாளை மறுநாள் (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை கடந்து நிலப்பரப்பிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

வரைபடத்தில் ‘எச்சரிக்கை’ (Warning) பிரிவின்கீழ் குறிக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரும் வடக்கு அகலாங்கு 10° முதல் 15° வரையிலான மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80° முதல் 90° வரையிலான கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்ட கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழ்கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (1) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணிநேரத்துக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?
செய்திகள்

பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?

November 1, 2026
வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!
செய்திகள்

வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

November 1, 2026
அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
செய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

November 1, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.