Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?

பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் காவியுடை அணிந்து, நாக உருவம் பொறிக்கப்பட்ட மரக்கைத்தடியை ஏந்தியவாறு ‘சிவுருக்கு நீதி’ என்ற தொனிப்பொருளில் நடைபயணத்தை ஆரம்பித்த நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் உருவாகியுள்ளது.

குறித்த நபர் உண்மையான பௌத்த பிக்கு அல்லர் என்றும், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பலாங்கொடை முன்னாள் நகர சபை உறுப்பினர் கிரேஷன் கெரமினியே என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும், இவர் கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதாகக் கூறப்படும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கடுகண்ணாவை பரமிதா பௌத்த நிலையத்திலிருந்து ஆரம்பித்து, கேகாலை ஊடாக கொழும்பைச் சென்றடையும் வகையில் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அரசியல் கட்சி பேதங்களைக் கடந்து சிங்கள பௌத்த உணர்வுகளைக் கொண்ட அனைவரையும் ஒன்றிணைப்பதே இதன் நோக்கம் என நடைபயணத்தின் தேசிய அமைப்பாளர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் ஆறு பேர் மாத்திரமே அதில் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் குறித்த நபர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது
செய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

November 1, 2026
வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!
செய்திகள்

வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

November 1, 2026
அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
செய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

November 1, 2026
Next Post
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு