Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

1 year ago
in செய்திகள்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தின் சுயாதீனத்தன்மை சவாலுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் விசாரணைகளின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா இல்லையா என்பதனை நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் குறித்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த விவகாரத்தில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்வது சட்டத்தின் நியாயதிக்கத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் பிரபல்யமான பொது நிலைப்பாடுகளின் அடிப்படையில் அன்றி சட்டத்தின் பிரகாரம் முன்வைக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

June 19, 2026
கொழும்பில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை
செய்திகள்

கொழும்பில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை

June 19, 2026
யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்!
செய்திகள்

யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்!

June 19, 2026
கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்
செய்திகள்

கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்

June 19, 2026
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!
செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!

June 19, 2026
Next Post
பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கிய ஆசிரியர் உட்பட இருவர் கைது

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கிய ஆசிரியர் உட்பட இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு