Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக மக்களுக்கான காணி உரிமை; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்- சந்தோஷ் ஜா சந்திப்பு

மலையக மக்களுக்கான காணி உரிமை; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்- சந்தோஷ் ஜா சந்திப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்று முன்தினம் (10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

அதேபோல் பெருந்தோட்ட பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக, ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கினங்க இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3 பில்லியன் ரூபாய் நிதி உதவியிற்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை தற்போதைய அரசாங்கத்தினூடாக மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதிற்கு இனங்க கடந்த வருடம் எமது நாடு பொருளாதார நெருக்கடியில் காணப்பட்டபோதும், சமீபத்திய வளர்ச்சிக்காகவும், வழங்கிய ஆதரவிற்கும் இந்தியா அரசாங்கத்திற்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்கள்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
Next Post
‘பாடசாலைக்கு மத்தியஸ்தம்’ என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு 3 நாள் செயலமர்வு

'பாடசாலைக்கு மத்தியஸ்தம்' என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு 3 நாள் செயலமர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.