Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்க சம்மாந்துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த மூன்று வீரர்களுக்கும் மொத்தமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை MUFO Cricket Academy-யைச் சேர்ந்த ஹம்தான், இஸ்பாக் மற்றும் சாஹித் ஆகிய மூன்று வீரர்களும் Riches Lanka Center for Cricket (RCC) ஊடாகத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை RCC அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் இம்மாதம் இந்தியாவின் ஹரியானா மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 2027 ஜனவரியில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கு உதவி வழங்குமாறு MUFO விளையாட்டுக் கழகம் முன்வைத்த கோரிக்கை, சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வில் பரிசீலிக்கப்பட்டது.

தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நேற்று (10) நடைபெற்ற கூட்டத்தில், இளம் வீரர்களின் சர்வதேசப் போட்டிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் நிதியுதவி வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்று வீரர்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, அண்மைய பல்கலைக்கழக அனுமதித் தெரிவில் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கவும் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஏனைய கல்விப் பிரிவுகளின் ஊடாகப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்களையும் பிரதேச சபைக்கு அழைத்து கௌரவிப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சர்வதேச மட்டத்தில் சாதிக்க முயற்சிக்கும் இளம் வீரர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!
உலக செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!

November 11, 2026
கித்துல்கலையில் முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து; இருவர் காயம்!
செய்திகள்

கித்துல்கலையில் முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து; இருவர் காயம்!

November 11, 2026
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!
செய்திகள்

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

November 11, 2026
ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு;  4 பேர் பலி, 71 பேர் காயம்!
செய்திகள்

ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு; 4 பேர் பலி, 71 பேர் காயம்!

November 11, 2026
யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

November 11, 2026
வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!
செய்திகள்

வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு