Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!

ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!

14 minutes ago
in செய்திகள்

இலங்கையின் அரசுக்குச் சொந்தமான மூன்று முக்கிய ஒளிபரப்பு நிறுவனங்களும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 271 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சின் இடைக்கால நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆகிய நிறுவனங்கள் இந்த நட்டத்தைப் பதிவு செய்துள்ளன.

ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 166 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) இதே காலப்பகுதியில் 37 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் 2025ஆம் ஆண்டில் 62 மில்லியன் ரூபா இலாபத்தையும், 2024ஆம் ஆண்டில் 3 மில்லியன் ரூபா இலாபத்தையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வரிக்கு முந்தைய 68 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் 2025ஆம் ஆண்டில் 203 மில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டில் 176 மில்லியன் ரூபாவையும் நட்டமாகச் சந்தித்திருந்தது.

இதற்கமைய, குறித்த மூன்று அரச ஒளிபரப்பு நிறுவனங்களும் இணைந்து 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 271 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளன.

எவ்வாறாயினும், நாட்டின் முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபா கூட்டு இலாபத்தைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த இலாபம் 227.8 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

அரச வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டியுள்ள நிலையில், அரச ஒளிபரப்பு நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருகின்றமை கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags: BatticaloaNewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!

November 11, 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!
உலக செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!

November 11, 2026
கித்துல்கலையில் முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து; இருவர் காயம்!
செய்திகள்

கித்துல்கலையில் முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து; இருவர் காயம்!

November 11, 2026
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!
செய்திகள்

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

November 11, 2026
ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு;  4 பேர் பலி, 71 பேர் காயம்!
செய்திகள்

ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு; 4 பேர் பலி, 71 பேர் காயம்!

November 11, 2026
யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு