சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.63 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 0.69 சதவீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, சர்வதேச சந்தையில் Brent ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.41 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 1.01 சதவீத உயர்வாகும்.
சர்வதேச சந்தையில் இரு முக்கிய கச்சா எண்ணெய் ரகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








