இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்வண்டி சாரதி மற்றும் நடாத்துனர் கேலி செய்ததாக தெரிவித்து, பஸ்வண்டியை நிறுத்தி சாரதி நடத்துனர் மீது தாக்குதல் நடாத்திய இருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று (20) இரவு மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்
பதுளையில் இருந்து புல்லுமலை ஊடாக மட்டக்களப்புக்கு இடையிலான போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியில் பிரயாணித்த புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை சம்பவதினமான நேற்று கேலி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பஸ்வண்டி மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்து, சேவையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பஸ்வண்டி புல்லுமலை பகுதியிலுள்ள பஸ்தரிப்பிடத்தில் நிறுத்தி பிரயாணிகளை ஏற்றிக் கொண்ட நிலையில் அங்கு காத்திருந்த இருவர் சாரதி நடத்துனர் உடன் வாய்தர்க்கதில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதலை நடாத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தாக்குதலை மேற்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்யுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.