Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தாண்டு மகளிர் தின கொண்டாட்டம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் யோசனையின் பேரில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள “சுஹுருபாய” கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

இம்முறை சர்வதேச மகளிர் தினமானது ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.

குறித்த தினத்திற்கு இணைவாக ‘நிலையான எதிர்காலத்தை அமைக்க – வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’ என்பதை பிரதான கருப்பொருளாக கொண்டுள்ளது.

மார்ச் 02ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 08ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரத்தை பிரகடனப்படுத்தி சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டங்கள் உள்ளடங்களாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்காக நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சந்தையை உருவாக்கவும், மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் “லிய சக்தி” மகளிர் கண்காட்சியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

September 11, 2026
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
Next Post
தொடர்ந்து மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

தொடர்ந்து மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு