டோகோ என்ற ஜப்பானியர் 2 மில்லியன் ஜப்பானிய யென்களை செலவழித்து தன்னை (46 இலட்சம் இலங்கை ரூபா) நாயாக மாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாயாக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு கனவு என்று டோகோ கூறியுள்ளார்.
டோகோவின் கனவை நனவாக்கும் வகையில், ஜப்பானில் தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ஆடைகளை வடிவமைக்கும் செபெட் என்ற ஜப்பானிய நிறுவனம் பல பணிகளை செய்துள்ளது.40 நாட்களில் அவருக்கான உண்மையான நாய் உடையை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
டோகோ, ‘நான் ஒரு மிருகமாக இருக்க விரும்புகிறேன்’ என்ற யூடியூப் சேனலை நடத்துகிறார்.