Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்!

2 years ago
in செய்திகள்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் தலைமையில், கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நேற்று (06) இடம் பெற்றது.

இதன் போது அதிகாரிகளினால் திட்ட முகாமைத்துவ குழுக் கூட்டத் தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டு அங்கிகரிக்கப்பட்டன.

இப் பிரதேசத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நேர அட்டவணை, மானிய உரம் வழங்கள், காப்புறுதி, அறுவடை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், விவசாயிகளின் பாவனையில் உள்ள வங்கி கணக்கு இலக்கங்களை வழங்குவதனால் துரிதமாக மானிய கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

அதேசமயம் விதைப்பு ஆரம்ப திகதியாக எதிர்வரும் 30. 03.2025, விதைப்பு முடிவுத் திகதி 10.04.2025, அறுவடை ஆரம்பமாகும் திகதியாக 25.07. 2025 முதல், முடிவுத் திகதி 30.07.2025 என தீர்மானிக்கப்பட்டதுடன், 3 1/2 மாதம் கொண்ட நெல்லினம் விதைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் கே. பிரதீபன், நீர்பாசன பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரியின் மகன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்?

யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரியின் மகன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு