Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

2 years ago
in செய்திகள்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

மார்ச் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் தினத்தையொட்டி அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவினால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதத்தில் பதில் வழங்கி உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த,

வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். அதற்கமைய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரதிநிதியுடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கலந்துரையாடல்களில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், அதற்கமைய தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

08ஆம் திகதி பி.ப. 6.00 மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ILO உடன்படிக்கை 190 இன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்காக அனைவருக்கும் காணப்படும் உரிமையை கண்டறிந்து 2019 ஜூன் 21 ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 108 ஆவது அமர்வில் தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரும், வன்முறை மற்றும் துன்புறுத்தல் இன்றி சகலரும் செயற்படக்கூடிய உரிமையை பாதுகாக்கும் சூழலை உருவாக்குவதற்கு அர்ப்பணித்து செயற்படுவதை உறுதிப்படுத்துகின்றது.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்கான அரசங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதுடன், அதுமட்டுமல்லாமல், அது சம்பந்தப்பட்ட சட்டரீதியான அமுல்படுத்தல்களுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த உடன்படிக்கையை இலங்கையில் அங்கீகரிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக இலங்கையின் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அந்த சந்தர்ப்பம் இழந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.