Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள்

கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள்

2 years ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர்.

அஞ்சல் தொலைதொடர்பு சேவையாளர் சங்கம், அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கம் என்பன இணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு தபால் திணைக்களத்திற்கு முன்னால் தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (14) மதியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

கடந்த வருடம் அமைச்சரவையில் தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த விடயங்களை தபால் திணைக்களத்தின் ஊடாக இதுவரை நடைமுறைப்படுத்தாதை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வெற்றிடங்களையும் உரிய முறையில் நிரப்ப வேண்டும், அமைச்சர் உறுதி அளித்த விடயங்களை உடன் நிறைவேற்ற வேண்டும், பதவி உயர்வுகளுக்கு காலம் தாழ்த்தாது உடன் வழங்க வேண்டும், தபால் திணைக்கள புதிய நியமன முறையை உடன் அமல்படுத்த வேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் 16ஆம் திகதி நள்ளிரவு முதல் 18ஆம் திகதி நள்ளிரவு வரையான காலப் பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தினை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் இவ்வார்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது

பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு