Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மதவச்சி மற்றும் ஹக்மண ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே குறித்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கிரிந்த – விலமுல்ல:
கிரிந்த–திஸ்ஸமஹாராம வீதியில் மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில், கெகிராவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹபரண – அலுத் ஓயா:
ஹபரண–கந்தளாய் வீதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் – சாலியபுர:
அனுராதபுரம்–ரம்பேவ வீதியில் முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்துள்ளார்.

மதவச்சி – கிரிகல்வெவ:
ஹொரவப்பொத்தான–மதவச்சி வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றுமொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹக்மண – கரதொட்ட:
ஹக்மண–கரதொட்ட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி சறுக்கிச் சென்று மின்சாரக் கம்பத்தில் மோதியதில், ஹக்மண பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அனைத்து விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.