மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது.
உள்ளூர் மீனவர்களால் “கொப்பறா” என அழைக்கப்படும் இந்த மீன், வழக்கமாக பிடிக்கப்படும் மீன்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியதாக காணப்பட்டதால், மீனவர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன் பிடிபட்டதைத் தொடர்ந்து, அதனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், பிரமாண்ட மீனை நேரில் பார்வையிடுவதற்கும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.







