நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனம் பொகவந்தலாவ பகுதியில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை மதுபோதையில் செலுத்தியதாகக் கூறப்படும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை, தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் பயன்பாட்டிலிருந்த வாகனம் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் சாரதி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், வாகனத்தில் பயணித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வசந்தன் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஜனாஷ்டன் ஆகியோரும் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாரதி கைது செய்யப்பட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







