Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிக்கும் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிக்கும் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எமக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களே இருக்கின்றன. அதனை அதிகரிப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதற்கு தேவையான வகையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்வோம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

1948 ஆண்டு முதல் இதுவரை 107பேரே ஒலிம்பிக் போட்டியில் பிரதிநிதிப்படுத்தி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. இதனை நாங்கள் அதிகரிக்க வேண்டும். அதேநேரம் இதுவரை எங்களுக்கு 2 ஒலிம்பிக் பதக்கங்களே வெற்றிகொள்ள முடியுமாகி இருக்கிறது.

1948ஆம் ஆண்டு டங்கன்வைட் பதக்கம் வென்றார் அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு சுசந்திகா ஜயசிங்க பதக்கம் வென்றார். அதன் பின்னர் எங்களால் எந்தவொரு ஒலிம்பிக் பதக்கத்தையும் வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

அதேபோன்று பொதுநலவாய போட்டிகளில் இதுவரை எமக்கு 24 பதக்கங்களே வெற்றிகொள்ள முடியுமாக இருக்கிறது. ஆசிய போட்டிகளில் அனைத்து வகையான போட்டிகளிலும் 51 பதக்கங்களையே வெற்றிகொள்ள முடியுமாகி இருக்கிறது.

அத்துடன் கிரிக்கெட் போட்டியில் உலகக்கிண்ணம் மற்றும் டி 20 உலகக்கிண்ணத்தை ஒரு தடவை வெற்றிகொண்டுள்ளோம். இவையல்லாமல் தனிப்பட்ட வெற்றிகளும் இருக்கின்றன.

எனவே, ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையை நாங்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் மேற்கொள்வோம் அதற்கு தேவையான வகையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்து, அந்த மாணவர்களை தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்ளச்செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இந்த முறை வரவு,செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது- என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
“7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல்”; அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம்

"7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல்"; அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.