தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் ஜனவரி 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.








