Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணி மோசடி விவகாரத்தில் சிக்கினார் சிரந்தி ராஜபக்ஸ

காணி மோசடி விவகாரத்தில் சிக்கினார் சிரந்தி ராஜபக்ஸ

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் தங்காலை கால்டன் ஹவுஸ் முகவரியை வதிவிடமாக கொண்டுள்ள சிரந்தி ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஹிம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்குள் பலவந்தமான முறையில் நுழைவதற்கு நான் முயற்சித்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இந்த காணிக்கான உறுதிப்பத்திரத்தை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த காணி விகாரைக்கு சொந்தமானது என்று உறுதிப்பத்திரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஹிம்புல்கொட இஹல்யாகொட கே.டி.பராக்ரம என்பவருக்கு சொந்தமான காணி கைப்பற்றப்பட்டு ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காணி 10 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 2012.03.02 ஆம் திகதி கே.டி தமித் பிரேமலால், என். கே. சுவர்ணலதா ஆகியோருக்கு சொந்தமான காணிகள் தங்காலை வீதி கால்டன் ஹவுஸ் இல.19 என்ற முகவரியில் வசிக்கும் சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ என்பவரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.

இந்த பத்திரத்தில் 535253314 வி என்ற தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணிகள் 5 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காணிகள் 2023.10.10 ஆம் திகதியன்று அமில கொடிகார என்பவருக்கு 120 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் இப்பிரதேச மக்கள் முறைப்பாடளித்தார்கள் .அதனால் தான் அங்கு சென்றேன்.

இந்த காணி உரித்து பத்திரத்தில் இந்த காணிகள் விகாரைக்கோ அல்லது விகாராதிபதிக்கோ சொந்தமானது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விகாரைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஆகவே இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.