Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை இலங்கையில் அனுபவிக்கமுடியும்.

மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்தில் இருந்து அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக கேபிள் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டவுள்ளது.

இந்த கேபிள் கார் திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டம் இவ் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது.

கடந்த (24) அம்புலுவாவ திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் அம்புலுவாவ அறக்கட்டளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுராத ஜெயரத்னவை சந்தித்துள்ளார்.

இதன்போது, “இந்த திட்டம் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்திருந்தது. ஒரு கனவாக வெகு தொலைவில் இருந்த இந்த திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களால் நிஜமாகிவிட்டது.

நுவரெலியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கம்பளையில் பயணத்தை ஆரம்பித்து அம்புலுவாவவில் கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில், கம்பளை ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு கேபிள் கார் சேவை விரிவுபடுத்தப்படும்,” என அநுராத ஜெயரத்ன சீனத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.

கம்பளை உலகின் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!
செய்திகள்

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
Next Post
யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு