Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் பலி

பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் பலி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் (29) இரவு 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நடத்திய இந்த தாக்குதலில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவனும், வீட்டில் இருந்த 28 வயதுடைய பெண்ணும் காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் விரைவாக அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த சிறுவன் பின்னர், கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) மாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதனால் சிறுவன் தந்தை வேலையிலிருந்து திரும்பும் வரை பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இருந்த பெண்ணே சிறுவனை பராமரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பெண் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, என்பதுடன், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு