நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற யுவதி ஒருவர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதி, சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த வைத்தியர், இதற்கு முன்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகளின் அரசமைப்பை மீறியதால் 2021ஆம் ஆண்டு தமது சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எந்த வகையிலும் தயாராக இல்லை எனவும் விசாரணைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.