உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கும், இன்னாருக்கும் தொடர்பு என்று நான் விசாரணைகளில் கூறவில்லை. அப்படி நான் கூறும் வகையில் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்து அரச சாட்சியாளராக மாற்ற முயற்சிக்கின்றனர்.
இலங்கை ஆட்சியாளர்கள் போர்க்காலத்தில் என்னை பயன்படுத்திவிட்டு இப்போது கைகழுவி விட்டனர்.
முதுகு வலியுடன் நிலத்தில் தான் நித்திரை செய்ய வேண்டிய நிலைமை. ஆட்கடத்தல் என்று கூறி கைது செய்து, இப்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை என்னுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர்.

இப்படி கண்ணீருடன் கம்மன்பிலவிடம் தெரிவித்திருக்கிறார் பிள்ளையான். அரை மணி நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த சந்திப்பு நேரம் முழுவதும் அருகில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.