ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான்–அமெரிக்கா இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியும் என்றும், அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்திருந்தது.
எனினும், அந்த நிபந்தனைகளை நிராகரித்துள்ள ட்ரம்ப், “ஈரான் ஒப்பந்தத்தை விரும்புகிறது. நானும் அதை விரும்புகிறேன். ஆனால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானியர்கள் உயிரிழந்து வருவதால் நீரிணையைத் திறக்க ஈரானும் விரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.







