ஈரான் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளையும் அமெரிக்கா முதலில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அமெரிக்காவிடமிருந்து இதுவரை கோரிக்கைகளுக்குப் பதில் கிடைக்கவில்லை என்றும், அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தத்தை எட்டுவதில் இன்னும் சிக்கல்கள் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.








