Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவூதி அரேபியாவுக்கான சர்வதேச விமானச் சேவைகள் இரத்து!

சவூதி அரேபியாவுக்கான சர்வதேச விமானச் சேவைகள் இரத்து!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவை இலக்காகக் கொண்டு ஹூதிகள் முன்னெடுத்து வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்நாட்டுக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.

பாதுகாப்பு நிலைமை தொடர்பான அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, ரியாத் மற்றும் ஜித்தா நகரங்களுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 30ஆம் திகதி வரை நிறுத்தி வைப்பதாக இந்தியாவின் அகசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, இண்டிகோ விமான நிறுவனம் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான சேவைகளை நவம்பர் 30ஆம் திகதி வரையும், ஜித்தா மற்றும் மதீனாவுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 21ஆம் திகதி வரையும் இரத்து செய்துள்ளது.

மேலும், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரியாத், ஜித்தா மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 14ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளன.

ஐரோப்பிய விமான நிறுவனங்களும் தமது சேவைகளை இடைநிறுத்தும் காலத்தை நீடித்துள்ளன. இதன்படி, KLM நிறுவனம் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 27ஆம் திகதி வரை இரத்து செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது லண்டன் – ரியாத் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை 2027 ஜனவரி 11ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 19ஆம் திகதி வரை நிறுத்தியுள்ளதுடன், ஓமானின் சலாம்ஏர் நிறுவனம் இவ்விரு நகரங்களுக்கான சேவைகளை நவம்பர் 30ஆம் திகதி வரை இரத்து செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட விமான நிலையங்கள், எரிசக்தி மையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களே இந்த விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சவூதி அரேபியாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து பயணிக்கும் சர்வதேசப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!
செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!

November 13, 2026
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைப்பு
செய்திகள்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைப்பு

November 13, 2026
அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!

November 13, 2026
நாடு தழுவிய ரீதியில் இன்று பொறியியலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்; அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் இன்று பொறியியலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்; அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

November 13, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.45 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஆசிரியை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.45 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஆசிரியை கைது!

November 13, 2026
கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகள் உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்; மேயர் எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகள் உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்; மேயர் எச்சரிக்கை!

November 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு