Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!

பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!

55 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸ் (Binance), தனது தளத்தில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்தேகத்தையடுத்து சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், கிரிப்டோகரன்சி நிதிகள் திருடப்பட்டனவா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

பயனர்களின் நிதிகள் முழுமையாகப் பாதுகாப்பாக இருப்பதாக பைனான்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹேக்கிங் காரணமாக ஏற்படும் இழப்புகளை நிறுவனம் ஈடுசெய்யும் என அதன் இணை நிறுவனர் யி ஹே குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மீறல் தொடர்பான தகவல்களை அவசரமாக ஆய்வு செய்து வருவதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அதிகாரபூர்வ வழிகளில் வெளியிடப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், சில கிரிப்டோகரன்சி வர்த்தகச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

டெதர் (Tether) நிறுவனம் சுமார் 1.6 பில்லியன் டொலர் பெறுமதியான USDT நாணயத்தையும், சர்க்கிள் (Circle) நிறுவனம் சுமார் 800 மில்லியன் டொலர் பெறுமதியான USDC நாணயத்தையும் முடக்கியுள்ளதாக அவற்றின் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை பிட்கொயின் (Bitcoin) பெறுமதி 3.2 சதவீதம் சரிந்து, 79,000 டொலருக்கும் கீழே சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைனான்ஸ் நிறுவனத்தை 2017ஆம் ஆண்டு நிறுவிய சாங்பெங் சாவோ, 2023ஆம் ஆண்டு பணமோசடியைத் தடுப்பதில் தவறிழைத்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகியிருந்தார். அவருக்கு 2025ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026
மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!
செய்திகள்

மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

October 30, 2026
இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

October 30, 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!

October 30, 2026
Next Post
மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு