Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்குக்கான ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அரசு ஊடக அறிக்கை

வடக்குக்கான ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அரசு ஊடக அறிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்குக்கான ஜனாதிபதி நிதிய சேவையை அனைத்து மக்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவால் ஊடகங்களுக்கு இன்று (4) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படை (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.- என்றுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது
செய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

November 1, 2026
பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?
செய்திகள்

பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?

November 1, 2026
வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!
செய்திகள்

வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

November 1, 2026
அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
Next Post
ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான மசோதா அருவருப்பானதென விமர்சித்த எலோன் மஸ்க்

ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான மசோதா அருவருப்பானதென விமர்சித்த எலோன் மஸ்க்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு