Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரசவ அறையில் தவறி விழுந்த குழந்தை மரணம்!

பிரசவ அறையில் தவறி விழுந்த குழந்தை மரணம்!

3 years ago
in செய்திகள்

மருத்துவ ஊழியர்களின் தவறினாலும் கவனக் குறைவினாலும் பிரசவ நேரத்தில் குறித்த அறையின் தரையில் விழுந்தசிசு ஒன்று, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்திற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே இந்த துயர அனுபவத்தை சந்தித்துள்ளார்.

41 வயதான அவரது கணவர், குமாரசிங்க திஸாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்-
எனது மனைவி கல்லஞ்சிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவள் அங்கு சிக்கல்களுக்கு ஆளானார். அம்புலன்சில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.பின்னர், பிரசவத்திற்காக பிரசவ அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால்
குழந்தையைப் பிடிக்க முடியாமல் என் குழந்தை தரையில் விழுந்துவிட்டது“ என கண்ணீருடன் தெரிவித்தார்.

தற்போது குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை சரியாக முதிர்ச்சியடையவில்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், அவர்கள் குழந்தை கீழே விழுந்ததைபற்றி பேசவில்லை என்று அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர இது தொடர்பாக தெரிவித்துள்ள தாது,பிரசவ அறையில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப்பிறகு சாதாரண பிரசவம் சுமார் 20 நிமிடங்களுக்குள் இடம்பெறும்.
முதலில் குழந்தையின் தலை வெளியில் வரும். அதன் பிறகு, தோள்பட்டை, கை பகுதி மற்றும் கால்கள் போன்ற பாகங்கள் வெளியே எடுக்கப்படுகின்றன. இது சிறிது நேரம் எடுக்கும் மிகவும் கடினமான செயல்.
ஆனால், சில சமயங்களில்குழந்தை ஒரே நேரத்தில் வெளியே வரும்.சில சமயம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நம்பிக்கை இல்லாதபோது திடீரென வரும்போதும், குழந்தையை வெளியில் பிடிக்க முயலும் போது சில சமயம் சிரமங்கள் ஏற்படலாம்.அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பங்களில் ஒன்று தான் தற்போது
இடம்பெற்றுள்ளது. ஏனெனில், இந்த தாய் பிரசவத்திற்காக வேறு வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்து இங்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த நாளில் அனுமதிக்கப்படவிருந்த பிரிவின்பிரசவ அறைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், அருகில் உள்ள பிரசவ அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.குறித்த அறையில் சிறிது நேரம் கழித்து தொடங்கிய
பிரசவத்தில் 31 வாரங்கள் ஆன குறித்த குழந்தை சரியாக வளர்ச்சியடையவில்லை எனவும் கண்டறியப்பட்டது.

கடும் அழுத்தத்தால் அதிகவிசையுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தொப்புள் கொடி உடைந்ததால், அக்குழந்தையை பிடிக்க அந்த நேரத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.ஆனால், என்ன நடந்தது
என்று என்னால் சரியாக சொல்ல முடியாது. இருப்பினும், இதை நான் எதிர்பாராத, துரதிர்ஷ்ட
வசமான சம்பவமாக பார்க்கிறேன்.ஆனால், அலட்சியமாக இதைப் பற்றி சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் இந்த பிரசவத்தை கவனித்துள்ளார்கள்-
என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
நாளை திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!

நாளை திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.