Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்கரை அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் அங்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகள் கடலோர வளங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றைத் தடுப்பதற்காக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட செயற்பாட்டுக் குழுவொன்றையும் நியமிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தல்கள், 2026ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் திட்ட முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் தொடர்பாக நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மீளாய்வுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மேற்கொண்ட திட்டங்களின் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.

ஒலுவில் பகுதியில் அதிகரித்து வரும் கடலரிப்பைத் தடுப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அதேவேளை, மனித–யானை மோதலைக் குறைக்கும் திட்டங்கள் மந்தமாக முன்னெடுக்கப்படுவது குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பணிகள் தாமதமடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்தார். இவ்வாண்டுக்கான நிதியை இவ்வாண்டிலேயே முழுமையாகப் பயன்படுத்தி திட்டங்களை நிறைவு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், யானை வேலிகள் அமைப்பதன் நோக்கம் வன எல்லைகளை வரையறுப்பதற்காக அல்ல, மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காகவே என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் நீர்வள பாதுகாப்பு, தூய்மையான கடற்கரைத் திட்டம், கரையோரப் பொழுதுபோக்கு பூங்காக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கான தரமான கார்பன் உமிழ்வு கொள்கையை உருவாக்குவதன் மூலம் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளும், வனவிலங்கு திணைக்கள ஓய்வு விடுதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டங்களும் கலந்துரையாடலில் முக்கிய இடம் பெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.