Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு நிலையம்; பைசால் காசிம் எம்.பி. நடவடிக்கை!

கல்முனை பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு நிலையம்; பைசால் காசிம் எம்.பி. நடவடிக்கை!

3 years ago
in செய்திகள்

கல்முனைப் பிராந்திய ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளருமான பைசால் காசிம் மேற்கொண்டு வருகின்றார்.

2010 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சராக ராஜித சேனாரத்ன எம்.பி. பதவி வகித்தபோது சாய்ந்தமருது பிரதேசத்தில் தொலைத்தொடர்பு நிலையமொன்று அமைக்கப்பட்டது. எனினும் அது சிறிது காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பைசால் காசிம் எம்.பி. அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பைசால் காசிம் எம்.பி. ஆகியோர் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இதையடுத்து இவர்கள் இருவருமாக கல்முனை பிராந்திய மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரஞ்சனுடன் மேற்கொண்ட தொலைபேசிக் கலந்துரையாடலின் போது கல்முனைப் பிராந்தியத்தை மையப்படுத்தி தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதி மிகவும் முக்கியத்துவமிக்க சாதனமாக கருதப்படுகிறது. ஆழ்கடல் மீனவர்களுடனான தொடர்பாடல்களுக்கும் கடலில் ஏற்படுகின்ற அனர்த்தங்களின் போது உயிரிழப்புக்களையும் படகு உள்ளிட்ட பொருள் சேதங்களையும் தவிர்த்து, பாதுகாப்பாக கரை திரும்புவதற்கும் தொலைத்தொடர்பு நிலையமே முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு மிகவும் அவசியத் தேவையாக இருந்து வருகின்ற தொலைத்தொடர்பு நிலையம் இப்பிராந்தியத்தில் இல்லாதிருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமுக்கு கல்முனைப் பிராந்திய மீனவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நோயாளிகள் தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாடுவதை குறைக்கும் அரசின் திட்டம்
செய்திகள்

நோயாளிகள் தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாடுவதை குறைக்கும் அரசின் திட்டம்

July 23, 2026
தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

July 23, 2026
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

July 23, 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
Next Post
கோறளைப்பற்று மேற்கு கோட்ட கல்வி தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழா!

கோறளைப்பற்று மேற்கு கோட்ட கல்வி தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு