Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதூர் – கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

மூதூர் – கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

1 year ago
in செய்திகள்

மூதூர் – கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக நேற்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் பெற்றோர், பழைய மாணவர்கள் இணைந்து இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கணிதம், சமயம், தகவல் தொழில்நுட்பம், சிங்களம், வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும்,

பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆசிரியரின்றி கற்பது எப்படி, ஏன் எம்மை கல்வியில் புறக்கணிப்பு செய்கின்றீர்கள், கல்வி நிர்வாகமே எங்கள் மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில், எங்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹாபிஸ் மரைக்காயர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டோரோடு கலந்துரையாடினார்.

அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டோரினால் தமது கோரிக்கை அடங்கிய மகஜரும் பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இது விடயமாக மூதூர் வலயக்க கல்விப் பணிப்பாளருக்கு தெரிவிப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
Next Post
சீனாவில் அரச அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரச அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு