முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (19) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் கொழும்பில் – வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









