Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ஈரான் ஏவிய ஏவுகணையிலிருந்து பல சிறிய குண்டுகள் வெளிவந்தன என தெரிவித்துள்ள இஸ்ரேல் பொதுமக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் ஈரான் இந்த ஆயுதத்தினை பயன்படுத்தியது என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது கிளஸ்டர் வெடிபொருட்களை கொண்ட ஏவுகணையை செலுத்தியது என வோசிங்டனிற்கான இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.

கிளஸ்டர் ஆயுதங்கள் ஒருபெரிய பகுதியில் வெடித்து பரவி தீங்கை ஏற்படுத்தும் தாக்குதலிற்கான வாய்ப்பை கொண்டவை என இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரான் சட்டவிரோதமாக வேண்டுமென்று பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது இந்த வகை ஏவுகணையை செலுத்தியதன் மூலம் பரந்தளவிற்கு பரவும் வெடிபொருட்கள் மூலம் பொதுமக்களிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த முயல்கின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்த தகவலை பெற முயன்ற வேளை ஐநாவிற்கான ஈரான் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

கிளஸ்டர் வெடிகுண்டுகளை ஈரான் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை இதுவே முதல்தடவை.

ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கி.மீ உயரத்தில் பிளந்து மத்திய இஸ்ரேலுக்கு மேலே சுமார் 8 கி.மீ சுற்றளவில் சுமார் 20 துணை வெடிபொருட்களை வெளியிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் மத்திய நகரமான அசோரில் உள்ள ஒரு வீட்டை சிறிய வெடிமருந்து ஒன்று தாக்கியதில் சில சேதங்கள் ஏற்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் இராணுவ நிருபர் இமானுவேல் ஃபேபியன் தெரிவித்தார். குண்டுவெடிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கிளஸ்டர் குண்டுகள் சர்ச்சைக்குரியவை ஏனெனில் அவை கண்மூடித்தனமாக பரந்துபட்ட பகுதிக்கு சிதறி பாதிப்பை ஏற்படுத்துகின்றன – அவற்றில் சில மோதல் முடிந்தபல வருடங்களின் பின்னரும் அழியாமலிருந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

வெடிக்காத வெடிபொருட்களின் ஆபத்துகள் குறித்த பொது எச்சரிக்கையாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு வரைபடத்தை வெளியிட்டது.

“பயங்கரவாத ஆட்சி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்கிறது மேலும் சேதத்தின் அளவை அதிகரிக்க பரந்த அளவில் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது” என்று இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தகவல்

மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.