வாகரை பிரதேச சபையின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்காக, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், TMVP வேட்பாளரை ஆதரித்து, தமிழரசுக் கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலில், தேசிய மக்கள் சக்தி எந்தவொரு நிலையான கொள்கையுடன் செயல்படவில்லை என்பது தெளிவாகிறது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்காக, தேசிய மக்கள் சக்தி TMVP-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வின்போதும் அவர் குறிப்பிட்டிருந்தார்.









