Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆரம்பமான தேசிய இளைஞர் மன்றம் முன்னெடுக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டமான கதிர்காம பாதயாத்திரை

மட்டக்களப்பில் ஆரம்பமான தேசிய இளைஞர் மன்றம் முன்னெடுக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டமான கதிர்காம பாதயாத்திரை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இனங்களிடையே ஐக்கியத்தினையும் சமாதானத்தினையும் கட்டியெழுப்பும் வகையில் இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டமான கதிர்காம பாதயாத்திரை நேற்று (20) மட்டக்களப்பில் ஆரம்பமானது.

”நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த கதிர்காம பாத யாத்திரை மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தப்பட்டுவருகின்றது.

இந்த நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பமான நிலையில் அது தொடர்பான நிகழ்வு கூழாவடி விக்னேஸ்வரர் திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்) மனுல சமன் பெரேரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் உப்புல், தேசிய மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் நா.குகேந்திரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களான மா.சசிகுமார், அ.தயாசீலன், திருமதி சதீஸ்வரி கிருபாகரன் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது இந்து, பௌத்த,முஸ்லிம் மதத்தலைவர்களினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரையில் வடகிழக்கு தெற்கு ஆகிய பகுதிகளில் இருந்து 100க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
மயிலத்தமடு விவகாரத்தில் வழக்கில் தொடர்புடைய 30 பேருக்கு நீதிமன்றம் விடுதலை வழங்கியது

மயிலத்தமடு விவகாரத்தில் வழக்கில் தொடர்புடைய 30 பேருக்கு நீதிமன்றம் விடுதலை வழங்கியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு