மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
படி ரக வாகனம் மீது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
மேலதிக சிகிச்சைகளுக்காக படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.








