Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி; சாடும் சி.வி.கே.சிவஞானம்

தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி; சாடும் சி.வி.கே.சிவஞானம்

1 year ago
in அரசியல், செய்திகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து தவறியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் தெரிவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு சபையிலும் ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் எல்லாத் தமிழ்க் கட்சிகளும் தொடக்கம் முதலே ஒரு இறுக்கமான கொள்கை கோட்பாடாகக் கடைபிடித்து வந்திருக்கின்றன.

இந்தக் கோட்பாட்டை தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு முழுவதும் எந்தப் பிசிறுமின்றிப் பின்பற்றி வந்திருக்கின்றது. இதுநாள் வரையில் ஏனைய தமிழ்க் கட்சிகளும்கூட அதனைப் பின்பற்றி வந்திருந்தன.

ஆனால் இந்த அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றனர். இது உள்ளூராட்சி சபைகள் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் தொடக்க காலக் கோட்பாட்டை முழுமையாக மீறும் செயல்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இந்த அணுகுமுறையை தமிழ் அரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்களின் இந்தச் செயல் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானது.

‘கொள்கைக்கூட்டு’ என்று முழங்கியவர்கள் இப்போது அடிப்படைக் கோட்பாட்டையே தகர்த்து தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்திருப்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்.” என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு