Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான், மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரியால் தாக்கியதில், மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வீரையா விஜயகாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்காக வயலுக்கு சென்றுஅங்கு சம்பவதினமான இரவு 10.00 மணியளவில் வாடியில் தங்கியிருந்துள்ள நிலையில், மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து மனைவியின் சகோதரியின் கணவர் மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ் தடவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பெரும் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு