சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை.








