Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே நேற்று (26) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

திருகோணமலை மாவட்ட, மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஹேமந்தகுமார் தலைமையில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இங்கே மீனவர்களால், முன்மொழியப்பட்ட பிரச்சினைகளை, அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை இனம் கண்டு, அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளை விரைவில் நாங்கள் முன்வைப்போம்.

சிறிய பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் முன்வைத்து, சாதகமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் உரிய கவனம் எடுத்து, அதனை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், திருகோணமலை துறைமுகத்துக்கு வெளியில், சிறு இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பதில் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சுருக்குவலை போட்டு மீன் பிடிப்பதில் ஏற்பட்டிருக்கின்ற தடைகள், இரவு நேரங்களில் அட்டை தொழில் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மீனவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும், சீனக்குடா கொட்பே மீன்பிடி துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தொடர்பாகவும், வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாகவும், கரவலை மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.

மீனவர்கள் எரிபொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்காக, எரிபொருள் நிலையங்களை பொருத்தமான பிரதேசங்களில் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு