கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 சோதனைகளை மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 25 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களின் அளவு குறித்து இன்று (28) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டது.
பொலிஸார் கையகப்படுத்திய ஹெரோயினின் பெறுமதி ரூ. 10.84 பில்லியன் என்றும், ஐஸ் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் ரூ. 12.16 பில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








