வடக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஈரப்பதன் நிறைந்த காற்றை இந்த மேலடுக்கு சுழற்சி உள்ளீர்க்கின்றது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் (04) வரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இக்காலப்பகுதியில் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கும் அதேவேளை சற்று குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.








