Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம்

யாழில் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்ரிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள பகுதிக்குள் கொட்டுவதால் அதனை நிறுத்தும்படி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்போது, இன்றையதினம் மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவு இயந்திரங்கள் பல வழிமறிக்கப்பட்டன. மலக் கழிவினை ஏற்றிவந்த மாநகர சபையின் வாகனம் ஒன்று உடனடியாக திரும்பிச் சென்றது.

வழமையாக குறித்த பகுதிக்குள் கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இது குறித்து பல தடவைகள் செய்திகளும் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் நேற்றையதினமும் தீ மூட்டிய நிலையில் அந்த தீ இன்றுவரை எரிந்து கொண்டு இருப்பதுடன் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் அண்டிய சூழலில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறித்த பகுதிக்கு நேற்றிரவு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வருகைதந்து பிரச்சினையை ஆராய்ந்ததாகவும், இதுவரை மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் களத்திற்கு வருகை தரவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் மயூரனுக்கும், கல்லூண்டாய் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான உஷாந்தன், வாசன் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

களத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸார் ஆகியோர் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் சட்டம் – உயர்ஸ்தானிகரின் கருத்தை மறுத்த நீதி அமைச்சர்

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் சட்டம் - உயர்ஸ்தானிகரின் கருத்தை மறுத்த நீதி அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.