களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் களனி கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.








