நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களும் மாணவர்களும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








