மட்டக்களப்பு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் இன்று காலை (03) இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி இருவார் காயமுற்ற நிலையில் வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பொருட்கள் ஏற்றி வந்த லொறியுடன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து வெலிக்கநதை நோக்கி சென்ற கனரக டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொரிவித்தனர்.
விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க்பட்டுள்ளன.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










