மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் இன்று (06) பஸ் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
செங்கலடியிலிருந்து உறுகாமத்திற்கு சென்று பஸ்ஸில் இருந்து இறங்கி, வீதியை கடக்கமுனைந்தபோது எதிர்திசையில் வந்த பஸ் மோதி இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

இதன் போது பஸ்சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்.








