3,200 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்தியவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) காலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








